முன்பு பழைய காலத்தில் இருந்து நமக்குத் தேவையான பொருட்களை நாம் சென்று வாங்கி வந்து இருந்தோம் இப்பொழுது அப்படி இல்லை அனைத்து பொருட்களுமே ஆன்லைன் ஆகிவிட்டது இதனால் பழைய நடைமுறையை மறந்து புதிய நடைமுறைக்கு அனைவரும் உள்ளே வந்து விட்டோம். ஆன்லைன் விற்பனை தளங்கள் (e-commerce) மூலம் துணி துவைக்கும் இயந்திரம் டிவி மொபைல் போன் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், உலகளவில் ஆன்லைன் விற்பனை 20-25% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் ஆன்லைனில் கவர்ச்சிகரமாக மற்றும் வசதிகளுடன் அளிக்கப்படுகிறது. இந்தியாவில், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் தள்ளுபடிகள், விமர்சனங்கள் மற்றும் வீட்டு விநியோகம் ஆகியவற்றால் பயனர்களை ஈர்க்கின்றன. முதலில் கருதப்படுவது வீட்டு விநியோகம் வீட்டில் இருந்தவரை நமக்குத் தேவையான பொருட்களை தேவையான நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதால் இன்றளவில் அதிகமாக ஆன்லைன் விற்பனையே பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
அவர்களுக்கு பிடித்தமான முறையில் பிடித்தமான வடிவமைப்பில் பிடித்தமான கலரில் இருப்பதால் பெரும் அளவில் ஆன்லைன் விற்பனைகளை விரும்புகிறார்கள். இது பெண்கள் உள்ளிட்ட பயனர்களுக்கு வசதியாகவும், பல தேர்வுகளை ஒப்பிட உதவுவதாகவும் உள்ளது. இப்பொழுது ஆன்லைனில் இயந்திரங்கள் முதல் பொம்மைகள் காலணிகள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் பல பொருட்கள் கிடைக்கின்றன. பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஆன்லைனில் கிடைப்பதால் பெரும்பாலானோர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் ஆர்டரையே விரும்புகிறார்கள்.