தமிழகத்தில் நேற்று ஒரு தடவை மட்டுமே 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மொத்தமாக 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்து உள்ளனர். கேரளாவில் மிக அதிக கொரோனா தாக்கம் சமீபமாக ஏற்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 8,000-த்தை தாண்டி உள்ளது. இதன் பாதிப்பால் நால்வர் உயிரிழந்து உள்ளனர். மேலும் மருத்துவ தகவலின் படி இன்புளுயன்ஸா காய்ச்சலும் அதிகமாக பரவி வருகின்றது. காலநிலை மாற்றங்களாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்சமயம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் உடல்நிலையில் அதிக கவனம் வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. ஒரு பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு காணப்பட்டால், பள்ளியை சுத்தம் செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மேலும் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், தற்சமயம் காலநிலை மாற்றங்களும் அதிகமாக நடைபெறுகின்றன. எனவே மாணவர்கள் நலனில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது என்று வலியுறுத்தியுள்ளனர்.