ஜப்பானில் அதிகரிக்கும் காலி நகரங்கள்.. 90 லட்சம் வீடுகளில் ஆட்களே இல்லை!!

Increasing number of empty houses in Japan

டோக்கியோ: ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிந்து வருவதால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஆள் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. அவர் கைவிடப்பட்ட வீடுகளை பேய் வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 2023 புள்ளி விவரப்படி தற்போது 8.9 மில்லியன் வீடுகள் காலியாக உள்ளதாக ஜப்பான் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது மொத்த வீடுகளின் 10.3% ஆகும்.

உரிமையாளர்களால் கைவிடப்பட்ட வீடுகளும் இதில் அடக்கம். மேலும் அடுத்த அடத்த ஆண்டுகளில் ஜப்பானில் மட்டும் 30.4% வீடுகள் காலியாக இருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக நோமுரா ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. விற்பனை வாய்ப்பு இல்லாத நிலத்தின் மீதான வரிசுமை, அதிக சொத்து வரி மற்றும் ஆளில்லாத வீடுகளை இடிப்பதற்கான செலவு போன்ற காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விதிமுறைகள் ஏப்ரல் 2024 வரை இருந்த நிலையில் வாரிசுதாரர்கள் சொத்தை விட்டு விட்டு தலைமறைவாகினர். டோக்கியாவின் சில பகுதிகளுக்கு அதிகாரிகள் சைக்கிள்களில் சென்று கவனித்து கூறுகையில், கைவிடப்பட்ட கட்டிடங்களை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளரிடமிருந்து புகார் வந்தால் உரிமையாளர் மற்றும் வாரிசை கண்டுபிடிக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளனர்.

கைவிட பட்டு வீடுகளினால் விபத்துக்கள் காட்டு விலங்குகளின் நடமாட்டம் மற்றும் குப்பைகள் நிறைந்த கட்டிடங்கள் போன்ற பிரச்சனைகள்  ஏற்படும் அபாயம் உள்ளது. சககிபாரா கூறியது, தூக்கி எறிந்து விட்டு புதிதாக்கும் கலாச்சாரமும் காலி வீடுகளுக்கு காரணம். எரிமலைகள் அதிகமாக உள்ளதால் மர வீடுகளை 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் பழக்கம் உருவானது.

திருமணங்களின் எண்ணிக்கை மற்றும் கர்ப்பங்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2022 ஜப்பானில் 7,70,000 பிறப்புகள் மட்டும் பதிவாகியிருந்தது.

கேயோ பல்கலைக்கழகத்தில் கணிப்பு படி மக்கள் தொகை 125 மில்லியனிலிருந்து 2065இல் 88 பில்லியனாக குறையும் என்றும் இது 30 சதவீத குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து தற்போது வரை குறைந்து வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram