சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடத்துகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதிய போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறியது பாகிஸ்தான் அணி.
இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி முதல் போட்டியாக இந்தியாவுடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரம்பிக்க வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியாக பங்களாதேஷ் அணி நேற்று நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் களம் இறங்கி 236 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 46.1 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதனால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி இரு அணிகளும் இரு போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. வருகிற இரண்டாம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து லீக் போட்டி நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தோல்வியால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்





