லண்டன், ஜூலை 10: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10, வியாழக்கிழமை) மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய நேரப்படி மதியம் 3:00 மணிக்கு டாஸ் போடப்பட்டது.
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
இங்கிலாந்து: சாக் கிராவ்லே, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்சே, ஜோஃப்ரா ஆர்ச்சர்.
கடந்த போட்டியில் ஓய்வெடுத்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அதேபோல், இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவு, தொடரில் எந்த அணி முன்னிலை பெறும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.