புதுடெல்லி: தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில் பாகிஸ்தானை சீனா பயன்படுத்தி வருகிறது என துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர் சி கூறியுள்ளார். புதுடெல்லியில் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் போது முக்கியமாக செயல்பட்டது வான்வழி சிறப்பு பாதுகாப்பு அமைப்புகள் தான்.
இந்தியாவிற்கு எல்லை ஒன்றாக இருப்பினும் எதிரிகள் மூன்று பேராக இருந்துள்ளனர். தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்க சீனா பாகிஸ்தானை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறது. பாகிஸ்தான் வைத்துள்ள ஆயுதங்களின் 81% சீனா தான் கொடுத்துள்ளது.
சீனா மட்டுமல்லாது துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குகிறது. இருப்பினும் வலுவான வான்வெளி பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. கடன் வாங்கிய போதிலும் இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானால் தப்பிக்க முடியவில்லை. ராணுவ இலக்கை அடையும் போது அதை நிறுத்துவதற்காக வான்வெளி சிறப்பு அமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது.
அப்போதுதான் போரை தொடங்குவதும், கட்டுப்படுத்துவதும் எளிமையாக இருக்கும். ஆபரேஷன் சிந்து மூலம் தாக்கியது ஒரு திறமையான தாக்குதல் என்று நான் நினைக்கிறேன். இந்திய ராணுவம் அனைத்து வழிகளிலும் போரை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருந்ததாக கூறினார் . பாகிஸ்தானை பாதிக்கும் வகையில் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.