புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணம் பாகிஸ்தானின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து பல மாகாணங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது நங்கர்ஹார் மாகாணத்தின் நுலாலாபாத்தை மையமாகக் கொண்டு உருவெடுத்தது. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மலைப்பிரதேசமான குனாரில் பல வீடுகள் மண்ணினால் கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் 8000க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கி புதைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதுவரை கிடைத்த தகவல் படி 1400 க்கும் மேற்பட்டவர்கள் நிலநடுக்கத்தில் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதி பொருட்களை உதவ முன் வருவதாக இந்தியா அறிவித்திருந்தது. அறிவிப்பின்படி 21 டன் எடையுள்ள நிவாரண பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் எடையுள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள், பாத்திரங்கள், சானிடைசர்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் போன்ற பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலையை தொடர்ந்து இந்தியா கண்காணித்துக் கொண்டிருக்கிறது. பின்வரும் நாட்களில் நிவாரண பொருட்கள் தேவைப்பட்டால் மேலும் அனுப்பி வைக்க தயாராக உள்ளது இந்தியா. என பதிவிட்டுள்ளார் மத்திய வெளி உறவுத் அமைச்சர் ஜெய்சங்கர்.