இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு!! டிரம்ப் மோடி சந்திப்பு விரைவில்!! 

India-US trade talks

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை விரித்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது அமெரிக்கா. வரிவிதிப்பு குறித்து மிரட்டிய அமெரிக்காவை கண்டு கொள்ளாமல் உள்ளது இந்தியா.
இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல விமர்சனங்களை முன் வைத்தும் கண்டுகொள்ளாத உள்ளது இந்தியா. ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே அமெரிக்கா இந்தியாவின் மீது வரி விதிப்பை விதித்துள்ளது.
வரிவிதிப்பை விதித்ததோடு அல்லாது, அதனை நியாயப்படுத்தி வருகிறது அதிபர் ட்ரம்பின் நிர்வாகம். அமெரிக்காவின் இந்த செயலால் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இருந்து வரும் வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியுடன் கூடிய பேச்சுவார்த்தை விரைவில் அமையும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு விரைவில் நடைபெறும் என தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அதில் கூறியதாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் சில வாரங்களில் பிரதமர் மோடியுடன் கூடிய சந்திப்பு விரைவில் நடைபெறும் அதனை எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram