சாம்பியன்.. சாம்பியன்.. இந்தியா சாம்பியன்!! மகுடம் சூடிய இந்திய அணி!!

india-wins-t20-world-cup-2026-third-title-champions-match-report

நேற்று (மார்ச் 8, 2026) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 3-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட (Defending Champions) முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (89 ரன்கள், 46 பந்துகள்) மற்றும் அபிஷேக் சர்மா (52 ரன்கள்) கிவிஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இஷான் கிஷன் தனது பங்கிற்கு 54 ரன்கள் குவித்து வலுசேர்த்தார். இறுதியில் சிவம் துபே கடைசி ஓவரில் 24 ரன்கள் விளாசி இந்தியாவை 250 ரன்களைத் தாண்ட வைத்தார்.

india-wins-t20-world-cup-2026-third-title-champions-match-report
india-wins-t20-world-cup-2026-third-title-champions-match-report

256 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அக்சர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த மெகா வெற்றியின் மூலம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, உலகக் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram