சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது இந்தியா!! இறுதி வரை போராடி நியூசிலாந்து தோல்வி!!

India wins the Champions Trophy

கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் ரச்சின் மெதுவாக ஆட்டம் தொடங்கிய நிலையில் ரச்சின் பிறகு அச்சுறுத்தலை கொடுத்து வந்த நிலையில் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தனார்.

நியூசிலாந்தில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் பிரேஸ்வெல் 53 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 251 ரன்கள் என இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டுகளும், ஜடேஜா ஷமி ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சுப்மன் கில் அடித்த பந்தை கேட்ச் பிடித்த பிலிப்ஸ் ஆட்டத்தை மாற்றினார். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தது, அடுத்து கிளம்புறீங்க சுரேஷ் ஐயர் நிதானமாக விளையாடினார். 76 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழக்க அக்சர் களமிறங்கினார்.

அக்சர்  சுரேஷ் கூட்டணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அதற்கு அடுத்து கலைஞர் ராகுல் ஜடேஜா வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்றனர். மூலம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram