இந்தியன் வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,500 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மாநில வாரியாக நிரப்பப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 277 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கி என்பது மத்திய அரசின் பொதுத்துறை வங்கி ஆகும். இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
பணியிட விவரங்கள்:
தமிழ்நாடு – 277, புதுச்சேரி – 9, ஆந்திரப் பிரதேசம் – 82, கேரளா – 44, கர்நாடகா – 42, தெலுங்கானா – 42, குஜராத் – 35
மொத்தம் – 1,500 பணியிடங்கள்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 01.04.2021க்கு முன்னர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
முக்கியமான மொழித் திறன்:
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, தமிழ்நாட்டிற்கான பணியிடங்களுக்கு தமிழ் மொழி அறிவது அவசியமாகும்.
வயது வரம்பு (01.07.2025):
பொதுப்பிரிவுக்கு – 20 முதல் 28 வயது வரை,
எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு – அதிகபட்சம் 33 வயது வரை (5 ஆண்டுகள் தளர்வு),
ஓபிசி பிரிவுக்கு – அதிகபட்சம் 31 வயது வரை (3 ஆண்டுகள் தளர்வு),
மாற்றுத்திறனாளிகளுக்கு – கூடுதல் 10 ஆண்டுகள் தளர்வு.
ஊதியம்:
மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகள் – ரூ.15,000,
ஊரக மற்றும் சிறுநகர கிளைகள் – ரூ.12,000
(பணி காலம்: ஒர் ஆண்டு – ஒப்பந்த அடிப்படையில்).
தேர்வு முறை:
1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு
2. உள்ளூர் மொழித் தேர்வு
இந்த தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு/ஓபிசி – ₹800
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் – ₹175
விண்ணப்ப முறை மற்றும் தேதி:
ஆன்லைன் விண்ணப்ப தொடக்கம் – 18.07.2025
கடைசி நாள் – 07.08.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் – www.indianbank.in
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் பட்டதாரிகள் வங்கித் துறையில் தங்கள் முதல் வாய்ப்பை பெறும் அரிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.