லண்டன்: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டிற்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என இரு தரப்பினரும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்திய வம்சாவளியினர் தேசிய கொடிகளை ஏந்திய படி நீண்ட வரிசையில் நின்ற இப்படி காத்திருந்து பிரதமர் நரேந்திர மோடியை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேசுகிறார். மேலும் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து பேச உள்ளார். இங்கிலாந்து சென்றடைந்த நரேந்திர மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரேந்திர மோடியை காண்பதற்காக குவிந்தனர்.
காத்திருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியின் உருவ புகைப்படங்களை கையில் ஏந்திய படி நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக வரவேற்பளித்தனர். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ச்சியை அவர்களுடைய அன்பும், பேரார்வமும் என்னை அகம் மகிழ செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.