41 ஆண்டுகளுக்கு பின் விண்வெளி செல்லும் இந்திய வீரர்!! ஜுன் 19 ல் செல்கிறார் சுபான்ஷு சுக்லா!! 

Indian soldier goes to space after 41 years!!

வாஷிங்டன்: இந்தியா,அமெரிக்கா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 4 பேர் விண்கலத்தில் பயணிப்பதாக விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு இந்திய நிறுவனம் தொடங்க உள்ள ககன்யான் திட்டத்தை கொண்டு வர  இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பின் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சேர்ப்பது இதன் நோக்கம். ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சேர்ந்து 2022 ஆம் ஆண்டில் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பின. இது தான் உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும்.

அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரக ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்த இருந்தது. ஜூன் 10ம் தேதி செலுத்தவிருந்த திட்டமானது தொழில்நுட்பம் மற்றும் வானிலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்தியா,போலந்து, அமெரிக்கா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் இருந்து தலா ஒருவர் என 4 பேரை தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு  நிறுவனம் இஸ்ரோ சார்பாக வீரர் சுபான்ஷி சுக்லா (39 வயது)  விமானியாக செல்லவிருக்கிறார். விண்வெளியை சென்றடைய 28 மணி நேரம் ஆகும்.

இந்நிலையில் பயணத்திற்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு 14 நாட்கள் தங்கியிருக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 41 ஆண்டுகளுக்கு பின் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க உள்ளார். இதற்கு முன்னாள் 1984 ல் ராகேஷ் சர்மா ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. சுக்லா உள்ளிட்ட 4 பேரும் வரும் 9 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லவிருக்கிறார்கள்.

சுபான்ஷு சுக்லா உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். 2006 ல் விமானப்படையில் சேர்ந்து 2024 ல் குழு கேப்டனாக பொறுப்பேற்றவர். ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்றவர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram