Cricket : இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. இது நியாயமான ஒன்று இல்லை என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கொந்தளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டுக்கான தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மற்றும் பங்களாதேஷ் அணி அரை இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி முதல் இரு அணிகளாக அறிவுமிக்க முன்னேறி உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறது.
ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் மட்டுமே விளையாடுகிறது. இது இந்திய அணிக்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். மற்ற அணிகள் வேறு வேறு மைதானங்களில் விளையாடுவதும் இந்திய அணி ஒரே மைதானத்தில் மட்டும் விளையாடுவது நியாயமானது அல்ல. இந்திய அணிக்கு ஒரு நியாயம் மற்ற அணிகளுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இதனை இந்திய அணி நன்றாக தெரிந்து கொண்டு தான் ஐந்து சுழற் பந்துவீச்சாளர் களைக் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தானில் மைதானங்கள் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் பாகிஸ்தான் அணி போன்ற மற்ற அணிகள் தனது அணியில் ஒரு முழு நேர சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே தேர்வு செய்தது. இதனால் மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாடும் போது துபாய் மைதானத்தில் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இப்படியே விளையாடி இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல திட்டமிட்டுள்ளது என கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்





