வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களுக்கு இந்தியர்களை வேலைக்கு எடுக்க கூடாது என மிரட்டி உள்ளார். Google மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் இந்தியர்கள் அதிகமாக பணியாற்றிய வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை கடுமையாக மிரட்டியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய அதிபர், நீண்ட காலமாக அமெரிக்காவில் தொழில்நுட்ப துறை தீவிரமாக உலகமயமாக்கலை பின்பற்றி வருகிறது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான டெக், சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து அவற்றில் இந்தியர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றனர். இது அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைக்கிறது. அதே சமயம் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததும், இந்தியர்களை பணியில் அமர்த்துவதும் நடந்து வருகிறது.
ஆப்பிள், google மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தை அதிக லாபம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இனிமேல் இதுபோன்று நடக்காது. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை கட்டுவதை விட்டு விட்டு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்கா நிறுவனமான டெக் நிறுவனம் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து அதில் பணிக்காக இந்தியர்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இது மட்டுமல்லாது அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக இந்தியர்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்க அதிபர் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை மிரட்டியுள்ளார். இந்தியர்களை அதிக அளவில் பணிக்கு எடுப்பதை விடுத்து உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.