தூங்கிட்டே போலாம்!! நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர்.. பிரதமர் மோடி எப்போது தொடங்கி வைக்கிறார்??

VandeBharatSleeper

இந்திய ரயில்வே துறையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவான ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இருக்கை வசதி (Chair Car) கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட தூரப் பயணங்களுக்காக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ (Vande Bharat Sleeper) ரயில் சேவை தற்போது தயாராகிவிட்டது.

ரயில்வே அமைச்சர் அளித்த முக்கிய அப்டேட்: நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையே இயக்கப்பட உள்ளது. இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இன்னும் 20 நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தப் புதிய ரயில் சேவையைக் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் டாப் வசதிகள்:

  • அதிநவீன வடிவமைப்பு: விமானங்களில் இருப்பதைப் போன்ற உட்புறக் கட்டமைப்பு மற்றும் சொகுசான படுக்கை வசதிகள்.

  • வேகம்: மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது. இதனால் பயண நேரம் கணிசமாகக் குறையும்.

  • பாதுகாப்பு: ‘கவச்’ (Kavach) எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

  • வசதிகள்: சென்சார் அடிப்படையிலான கதவுகள், நவீன கழிப்பறைகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் மினி பேன்ட்ரி வசதி உள்ளது.

ஏன் கொல்கத்தா – குவஹாத்தி ரூட்? வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு முக்கியப் பாதையாக இது கருதப்படுகிறது. இந்த ரூட்டில் இயக்கப்படும் ஸ்லீப்பர் வந்தே பாரத், சுற்றுலா மற்றும் வணிக ரீதியாகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனை ஓட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஜனவரி மாத இறுதிக்குள் இந்திய ரயில்வேயின் இந்த ‘புதிய மைல்கல்’ மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகிறது!

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram