புதுடெல்லி: கடந்த 21ஆம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் சென்றது. அப்போது வானிலை மோசமான நிலை ஏற்பட்டதால் நடுவானில் சிக்கியது இண்டிகோ விமானம். விமானத்தில் 227 பயணிகளுடன் தரையிறங்கியது. மிகவும் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் நடுவானில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இண்டிகா விமானம் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விமானத்தில் முகப்பு பகுதியில் மட்டும் பெரும் சேதம் ஏற்பட்டது. அதில் பயணம் செய்து 227 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஆபத்திற்கு பாதகம் இல்லாமல் பாகிஸ்தானிடம் தரையிறங்க அனுமதி கேட்டு இருந்த நிலையில் பாகிஸ்தான் அந்த அனுமதியை நிராகரித்துவிட்டது. வழக்கம்போல் பயன்படுத்தக்கூடிய பாதையிலேயே வானிலையில் ஏற்பட்ட மோசமான நிலையை எதிர்கொண்டு இண்டிகோ விமானம் பத்திரமாக தரையில் இறங்கியது.
டெல்லியில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் 6E 2142 என்ற விமானம் 227 பயணிகளுடன் பயணம் மேற்கொண்டது. பயணத்தின் போது நடுவானில் விமானம் பழுதடைந்ததால் சர்வதேச எல்லைகளை நோக்கி விலகுவதற்காக இந்தியா,பாகிஸ்தான் ராணுவ படையின் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அனுமதியை பாகிஸ்தான் நிராகரிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அந்த அனுமதியை நிராகரித்தது. நடுவானில் ஏற்பட்டு ஆலங்கட்டி மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக விமானமானது கீழும் மேலும் தள்ளப்பட்டு இருந்த நிலையில் விமானம் அதிக வேகத்தில் செலுத்தப்பட்டது.
விமானம் 8,500 அடி கீழிறங்கிய போதிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்ரீநகரில் நடுவானில் தத்தளித்து கொண்டிருந்த விமானத்தை பத்திரமாக தர இருக்கின்றன. இதில் முன் பகுதி மட்டும் சேதமடைந்த நிலையில் 227 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது. என மத்திய போக்குவரத்து இயக்குனரகம் தெரிவிக்கப்பட்டுள்ளது .