புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பகல் காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்களுடன் இணைந்து ரெசிஸ்டன்ஸ் பிரின்ட் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
சுற்றுலா பயணிகளின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையை கையில் எடுத்து 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை அளித்தது. போர் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவான நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. “ஆபரேஷன் மகாதேவ்” என்று நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் விவரங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது. லஷ்கர் இ தைபா பயங்கரவாத அமைப்பின் மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. பகல்காமின் பேசரன் பகுதியை இலக்காக வைத்திருந்தனர்.
பேசரன் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு குறைவு மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுவதால் பயங்கரவாதிகளுக்கு ஏற்ற இடம் மட்டுமல்லாது தனிமையான இடம் என்பதால் இப்பகுதியை தேர்வு செய்துள்ளனர். மேலும், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை தொழிலாளர்கள் இரண்டு பேருக்கு ரூ 3000 கொடுத்த அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றப்பாதை பத்திரிக்கையை வெளியிட்டுள்ளது என்ஐஏ.