நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி உலக மகளிர் தின விழா நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய சரோஜா , மற்றும் சாந்தி அவர்களுக்கு “தூய்மை தங்கமலர்” என்ற பெயரில் பொன்னாடை போற்றி , சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வீட்டு உரம் தயாரிக்கும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மோகனூர் ரோடு ராக்கி நகரை சேர்ந்த சுமதி அவர்களுக்கு “பசுமை காவலர்”என்ற பெயரிலும் பொன்னாடை போற்றி ,சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்பு டெங்கு ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய கனகா , மகேஸ்வரி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியில் தொழில் உரிமம் வசூல் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு தீபிகா , உமா ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சியில் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி அவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் அனைவரும் கேக் வெட்டி உலக மகளிர் தின விழாவை சிறப்பாக மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுமார் மற்றும் துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணி உதவியாளர், தூய்மை திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


