விசாகப்பட்டினம்: “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருத்தை கொண்டு 191 நாடுகளில் 16வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான பங்கேற்று உள்ளனர். இது கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் ஐ நா சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவின் நன்மைகள் பற்றியும், அதன் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். இதன் மூலம் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததில் 177 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தது. ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்தது மட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் 16 வது சர்வதேச யோகா தினம் கொண்டாட விசாகப்பட்டினத்தில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்கே கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை நடைபெறுகிறது. குறிப்பாக 26 கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. 3.19 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, சர்வதேச யோகா தினம் மாநிலம் முழுவதும் யோக நிலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவித்தார். யோகா தினத்தை ஒட்டி காலை ஆறு முப்பது மணியிலிருந்து 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது மேலும் 3 லட்சத்துக்கும் மேல் மக்கள் பங்கேற்க உள்ளனர் இதில் பிரதமர் மோடி தலைமை தாங்கியுள்ளார்.