cricket: ஐ பி எல்போட்டி தொடர்கள் மிகவும் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இன்று தொடங்கவுள்ளது. இன்று பெங்களுரு மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதவுள்ளன.
ipl போட்டியானது விறுவிறுப்பாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வந்த நிலையில் திடிரென இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இதன் காரணமாக சிறப்பாக நடைபெற்று வந்த ipl போட்டி தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்த முறை சிறப்பாக விளையாடி வந்த பெங்களுரு அணி மீண்டும் கோப்பையை வெல்ல முடியாத சூழல் உருவானது. இதனால் இந்த முறையாவது பெங்களுரு கோப்பையை வெல்லுமா என எதிர் பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் இந்த தொடர் நிறுத்தப்படும் என வதந்திகள் எழுந்த நிலையில் பெங்களுரு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் இந்த முறை கோப்பையை வெல்வது பஞ்சாப் தான் என ஒரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கருது தெரிவித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இதனால் ipl போட்டி தொடரானது மீண்டும் தொடங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று முதல் மீதம் உள்ள போட்டிகள் நடத்தப்படும் என அட்டவணை வெளியிட்டது ipl நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி இன்று பெங்களுரு மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மொத உள்ளன. பெங்களூரு அணி ரசிகர்கள் ஆவலுடன் கோப்பை இந்த ஆண்டு வெல்ல போகிறது என பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.