IPL: ஐபிஎல் போட்டிகளில் பல சாதனைகள் இருக்கும் பட்சத்தில் அனைத்து சாதனைகளிலும் இடம் பிடித்த ஒரு முக்கிய வீரர் குறித்து பார்ப்போம்.
தற்போது வருகிற 22 ஆம் தேதி ஐபிஎல் 2025 காண முதல் போட்டி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாபெரும் எதிர்பார்ப்புடன் 22 ஆம் தேதி முதல் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக கொல்கத்தா மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோதிக் கொள்ள உள்ளன.
இந்நிலையில் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 53 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். 19 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதுவரை 17 வீரர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடி ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளனர். மேலும் 8 வீரர்கள் 250 க்கும் மேற்பட்ட சிக்சுகளை விளாசி உள்ளனர. 8 கேப்டன்கள் இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். 4 பேட்ஸ்மேன்கள் 6500 க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளனர்.
ஆனால் இந்த அனைத்து சாதனைகளும் செய்த ஒரு ஜாம்பவான் யார் என்றால் அது ரோகித் சர்மா தான். இதுவரை சொன்ன அனைத்து சாதனைகளையும் ரோகித் சர்மா செய்துள்ளார்.