டெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது ஈரான் வான் எல்லையை மூடியது. நேற்று இரவு மீண்டும் வான்வழி எல்லையை மூடியுள்ளது ஈரான். போக்குவரத்து அமைச்சகத்தில் செய்தித் தொடர்பாளர்களிடம் பேசிய மஜீத் அகவன், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவில் வான் எல்லையை மத்திய மற்றும் மேற்கு பகுதியில் மூடி உள்ளோம்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வான் எல்லையை மூடி உள்ளோம். சர்வதேச விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதியை பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தெற்கு வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமெனி ஆகிய விமான நிலையங்கள் இயக்கத்தில் உள்ளது.
குறிப்பாக (இன்று) 3 ஆம் தேதி மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தவிர தெரிவித்தார். இஸ்ரேலுடன் நடந்த போர் 25ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் அதன் பின்னர் நான்கு நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு வான்வெளி திறக்கப்பட்டது. ஹஜ் புனித யாத்திரை முடிந்து சவுதி அரேபியாவில் இருந்து திரும்பும் ஈரான் யாத்திரிகர்களுக்கு விமானம் திறக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் வான் பரப்பை ஈரான் மூடியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கும்.
அமெரிக்காவும் சில நாட்களுக்கு முன்னர் தாக்குதலை நடத்தி இருந்ததால் ஈரான் குற்றம் சாட்டியிருந்தது. மீண்டும் அமெரிக்கா எங்கள் மீது போர் தொடங்கினால் ஹார்முஸ் நீரினை முழுவதும் கன்னி வெடிகளை மிதக்க விடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமான போரில் அமெரிக்கா தலையிட்டால் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது ஈரான். இவ்வாறு நடந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.