400  கிலோ யுரேனியத்தை நேக்காக பதுக்கி வைத்த ஈரான்!! தலை சுற்றி நிற்கும் அமெரிக்கா!! 

Iran is hoarding uranium!!
டெஹ்ரான்: ஈரானின் முக்கியமான மூன்று அணுசக்தி உலைகளின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரண்டு நாடுகளும் அணுசக்தி உலைகளை அழித்துவிட்டோம் என்று நினைக்கையில் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு இடத்தில் பதுக்கி வைத்துள்ளது ஈரான். நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோ போன்ற முக்கிய அணு உலைகளை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது. ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருந்தார்.
ஆய்வுகளின் மூலம் மையங்கள் சேதமடைந்ததே தவிர முழுமையாக அழிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றன. சுமார் 60% சரி ஊட்டப்பட்டு இருந்த நிலையில் யுரோனியத்தை வைத்து 10 அணு ஆயுதங்களாக மாற்ற முடியும். யுரேனியம் முழுமையாக அளிக்கப்பட்டுள்ளது என கூறியது அதனை அமெரிக்க உளவுத்துறை ஏற்க மறுத்தது. துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் யுரேனியம் தாக்குதல் குறித்து ஈரானிடம் பேச விரும்புகிறது அமெரிக்கா என்று கூறி இருந்தார்.
ட்ரம்பின் உறுதியான பேச்சால் அரசு அதனை அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்தது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பேசிய கரோலின் லீவிட், உளவு அமைப்புகள் ஈரானை கண்காணித்து வருகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்குதலுக்கு முன்பு மாற்றப்பட்டதற்கான எந்த தடயமும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார்.
நியூ யார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்த செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில்,” ஈரானின்  மையங்கள் சேதமடைந்தது தவிர  முற்றிலும் அழிக்கபடவில்லை என்றும், யுரேனியத்தை பதுக்கி வைத்துள்ளனர் எனவும் உளவுத்துறை உறுதியான முடிவுக்கு வரவில்லை” என வெளியிட்டிருந்தது. IAEA இயக்குனர் ஜெனரல் கூறியது, ஈரானுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்தால் யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றி கொள்வோம் என ஈரான் கூறியதாக கூறினார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram