இனி எங்களை சீண்டாதீங்க!! அமெரிக்காவை எச்சரித்த ஈரான் தலைவர் காமேனி

Iran Khamenei warned America

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் முக்கிய மூன்று அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தாக்குதலின் போது போர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் போன்ற அணு சக்தி மையங்கள் மீது ஏவுகணை கொண்டு தாக்கியது. அணுசக்தி மையங்கள் பாதிக்கப்பட்டதை தவிர முற்றிலுமாக அளிக்கப்படவில்லை.
ஈரான் உச்ச தலைவர் காமேனி தனது பக்கத்தில் வெளியிட்டதாவது, அமெரிக்காவை வீழ்த்தியதற்காக ஈரானின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள், ஜியோனிச ஆட்சி முழுமையாக அளிக்கப்பட்டு விடுமோ என்ற நோக்கத்தில் அமெரிக்கா போரில் நேரடியாக நுழைந்தது. தாக்குதல் நடத்தியதையே தவிர அமெரிக்கா  எதையும் சாதிக்கவில்லை. அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய குடியரசு கன்னத்தில் அறைந்தது போல் நிலைமை ஆயிற்று.
ஈரானின் தாக்குதலின் போது அமெரிக்காவின் முக்கிய முகாம்களில் ஒன்றான அல் உதெய்த் விமான தளத்தை தாக்கி சேதப்படுத்தியது. இஸ்லாமிய குடியரசால் அமெரிக்காவின் முக்கிய மையங்கள் அனைத்தையும் நெருங்க முடியும். தேவைப்படும் போது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
“மீண்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் எதிரி நாடானது மிகப்பெரிய விலையை ஈடாக கொடுக்க வேண்டியதாக இருக்கும்” என கண்டித்துள்ளது. அமெரிக்கா தாக்குதலின் போது ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இவ்வாறு கூறியது தவறான வார்த்தை என்று அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரான் தலைவர் காமேனி.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others

Latest Post

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram