வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து அமெரிக்கா கடந்த மாதம் 13ஆம் தேதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த தாக்குதலானது 13 நாட்களுக்கு மேல் நீடித்த நிலையில் அமெரிக்கா களம் இறங்கியது. இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானை எதிர்க்கும் வகையிலும் ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா குண்டு வீசும் போது ஈரானின் மூன்று அணு ஆராய்ச்சி மையங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அமெரிக்கா விமானப்படை தளம் அமைந்துள்ள கத்தாரில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் விமானப் படைத்தளம் அல் அடிக்ட் கத்தாரில் அமைந்துள்ளது.
இதில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. கத்தாரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அமெரிக்கா மறுத்தது. ஈரானின், ஏவுகணை தாக்குதல் கத்தாரில் உள்ள விமானப்படை தளத்தை தாக்கியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
விமானப் படைத்தளம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர்களிடம் இன்று ஏற்பாடு செய்திருந்த பேட்டியில் தெரிவித்துள்ளது அமெரிக்கா.