தனுஷின் ‘குபேரா’க்கு கடும் போட்டியா?? ஒரே நாளில் திரைக்கு வர உள்ள 3 முக்கிய திரைப்படங்கள்!!

ஜூன் மாதம் மந்தமாக இருந்த தமிழ்த்திரை உலகம், வரும் ஜூன் 20ம் தேதி முதல் புதிய உயிர் பெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்திற்கு, அதே நாளில் அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’, மற்றும் வைபவ் நடிக்கும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படங்கள் கடும் போட்டியாக உருவாகின்றன.

குபேரா – தனுஷின் மெகா ரிலீஸ்!பல்வேறு மொழிகளில் வெளியாகும் இந்த படம், நடிகர் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தன்னா இணைந்து நடித்துள்ள படம். நாகார்ஜுனா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்வில், தனுஷ் “பவன்கல்யாணை இயக்க ஆசை” என தெரிவித்தது வைரலானது. ₹120 கோடி படக்காசீலுடன் தயாரான இப்படம், தற்போது வரை ₹110 கோடி வரை விற்பனையை பதிவு செய்துள்ளது.தீவிர ப்ரஷரில் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்க முடியாமல், ஜூன் 20 திரைப்படம் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஎன்ஏ – அதர்வாவின் மெடிக்கல் திரில்லர்!

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள ‘டிஎன்ஏ’ ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. முக்கிய கதாநாயகனாக அதர்வா மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். டீசர் வெளியான பிறகு திரை ரசிகர்களிடையே இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. வித்தியாசமான இசை அணுகுமுறையில் 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர் – வைபவ் மற்றும் அதுல்யா ரவி இணைந்து

வங்கிக்கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த காமெடி ஹீஸ்ட் திரைப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். வைபவ், அதுல்யா ரவி ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். அண்மையில் வெளியான டீசர், ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

ஜூன் 20ம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு மூன்று வெவ்வேறு சுவைகளில் திரைப்படங்கள் வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வருமானத்திலும், ரசிகர்களின் திரையரங்க அனுபவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram