கொள்ளு பயிரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு, பொதுவாகவே கொளுத்தவனுக்கு கொள்ளை கொடு இளைத்தவனுக்கு எள்ளை கொடு என்று ஒரு பழமொழி இருக்கிறது எந்தவிதமான சைடு எபெக்ஸும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு நாம் வாரம் இரண்டு முறை கொள்ளை பயன்படுத்தலாம். கொள்ளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நமக்கு மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். வாரத்தில் இரு முறை கொள்ளை முளைகட்டி சாப்பிடுவதால் உடம்பில் உள்ள எல் டி எல் என்னும் கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
கொள்ளை நன்றாக வறுத்து பொடி செய்து அதிகபட்சமாக வாரத்தில் மூன்று முறை வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணம், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் ஏற்படாது. கொள்ளில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் பெண்கள் மாதவிடாயின் போது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதையும் தடுக்கிறது. சிறுநீர் கற்களை சரி செய்ய இது பெரிதும் உதவுகிறது.
உடம்பில் சளி மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்டால் கொள்ளு சூப் மற்றும் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் சளி சம்பந்தமான பிரச்சினைகள் சரி ஆகும். கொள்ளு உண்பதன் மூலம் உடம்பில் அதிகப்படியான சூடு ஏற்படும். இதனால் வாரத்தில் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். வெந்தயத்தையும் இடைப்பட்ட நாட்களில் எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் உடல்நிலை சமச்சீராக இருக்கும்.