கிரிக்கெட்: நடைபெற்று முடிந்த டெல்லி மற்றும் குஜராத் போட்டி குறித்து ரசிகர்கள் புலம்பல். மேலும் இன்று மும்பை மற்றும் டெல்லி மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ipl போட்டியானது சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் நடுவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர் பதற்றம் காரணமாக சில நாட்கள் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு இதற்கு மேல் போட்டிகள் நடைபெறாது என கூறி வந்த நிலையில் மீண்டும் 17 ம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா மற்றும் பெங்களூரு இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த நிலையில் மலை காரணமாக தடைபட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் டெல்லி மற்றும் குஜராத் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது இதில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 204 ரன்கள் அடித்த நிலையில் கே எல் ராகுல் 112 ரன்கள் விளாசினார். ஆனால் அடுத்து களமிறங்கிய குஜராத் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் சிறப்பாக விளையாடி 19 வைத்து ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். அதில் ஸ்டார்க் மீண்டும் அணிக்கு திரும்பவில்லை அதனால் தான் ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி பெற்றது குஜராத் என கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கே எல் ராகுல் மட்டும் போதுமா பவுலர்களும் அணிக்கு விக்கெட் எடுக்க வேண்டும் என்று விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இன்று டெல்லி மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி யாருக்கு?