கிரிக்கெட்: ரோஹித் சர்மா மற்றும் விராட் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற பின் விராட் கோலி திடீரென அவரது ஓய்வு அறிவிப்பை டெஸ்ட் தொடரிலிருந்து அறிவித்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்திருந்தார். இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருந்து வந்த நிலையில், திடீரென இந்திய அணியின் ஒரு முக்கிய ஜாம்பவான் வீரரான விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
விராட் கோலி இதுவரை 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸ் விளையாடி 9230 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 46.6. மேலும் இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர் பார்த்த நிலையில் அவர் தற்போது ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த டெஸ்ட் போட்டியின் கேப்டன் யார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேப்டன் போட்டியில் சுப்மன் கில், கே எல் ராகுல், பும்ரா, பந்த் என இவர்களின் பெயர்களே அடிபடுகின்றன. இதில் யார் அடுத்த கேப்டன் என்பது பற்றி உங்கள் கருத்து?
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடும் வீரர் மட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த வீரர் அதனால் அவர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அடுத்த கேப்டனாக கில் இருப்பார் எனவும் துணை கேப்டனாக பும்ரா இருப்பார் எனவும் பரவி வரும் கருத்துக்களால் கே எல் ராகுல் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.