கடினமான உழைப்பும்,கடவுளின் அருளும் வீட்டில் சுத்தமும்,ஒழுக்கமும் இருக்க வேண்டும்.
மகாலட்சுமி வழிபாடு:
வீட்டில் பணம் செல்வம் நிறைந்திருக்க முதலில் நாம் மகாலட்சுமிக்கு பிடித்தமான காரியங்களை செய்ய வேண்டும். வீட்டில் லட்சுமி வசிப்பதற்காக வீட்டில் லட்சுமி தேவியை நம் கொண்டுவர வேண்டும்.
1. படிகாரத்தை வீட்டில் வைக்கலாம் 2.வியாழக்கிழமைகளில் சாம்பிராணியை ஏற்றி மகாலட்சுமி தெய்வத்திற்கு பூஜை செய்யலாம். 3.மகாலட்சுமிக்கு பிடித்தமான காரியங்களை செய்து அவர்களின் மனதை குளிர வைக்கலாம்.
செல்வம் பெருக வேண்டும் என்றால் மகாலட்சுமியின் அருள் நமது வீட்டில் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். நமது வீட்டில் சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்திருக்க மகாலட்சுமியை வழிபட வேண்டும். பண வருமானத்திற்கு ஏற்றவாறு நாம் பரிகாரங்களை கூட செய்யலாம். எப்பொழுதும் செல்வம் பெருக வேண்டுமென்று நினைத்தால் அன்னை மகாலட்சுமியின் வழிபாடு மிக மிக அவசியம்.
குலதெய்வ வழிபாடு:
நமக்கு எப்பொழுது பிரச்சனை வந்தாலும் முதலில் வந்து நிற்பது நமது குல தெய்வமே.
வீட்டில் குலதெய்வத்தை தினமும் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட்டால் பணம் வந்து சேரும்.
தினசரி எழுந்ததும் முதலில் நாம் நமது உள்ளங்கை அல்லது நமது பிள்ளைகள் குழந்தைகளின் முகத்தை பார்க்கலாம் அப்படி இல்லை என்றால் நமது வீட்டில் உள்ள சாமி படங்களை பார்க்கலாம்.
முக்கிய குறிப்பு:
வீட்டில் தினந்தோறும் ஒருமுறையாவது நாம் சாமி கும்பிட வேண்டும். பூஜை செய்ய வேண்டும். வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பது மிகவும் நல்லது. வலம்புரி சங்கு வைத்திருக்கும் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும். இவ்வாறு நமது வீட்டில் மகாலட்சுமியின் அருளும் நமது குலதெய்வத்தின் அருளும் பெற்ற வீட்டை தினந்தோறும் சுத்தமாக வைத்து பூஜை செய்து வந்தால் வீட்டில் பணம் மற்றும் நிம்மதி பெருகி சந்தோசமாக வாழலாம்.


