சென்னை பல்லாவரத்தில் பிறந்து தென்னிந்திய சினிமா முதல் பான் இந்தியா வரை தன் நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ள சமந்தா, இப்போது தமிழை விட ஹிந்தி சினிமாவிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான சிடாடல் பாலிவுட் வெப் சீரிஸில் அவர் நடித்தது எல்லாம் தெரிந்த விஷயமே. ஓடிடி உலகில் பெரிய அளவுக்கு ஹிட் ஆகவில்லை என்றாலும், சமந்தாவுக்கு புதிய பாலிவுட் வாய்ப்புகள் தடை இல்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக சமந்தா இப்போது பெரும்பாலும் மும்பையில் தங்கி, ஹிந்தி படங்களுக்கு கூட்டணி அமைத்து வருகிறார். அதற்கிடையில் சிடாடல் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் நிதிமோருவுடன் சமந்தா நெருங்கி பழகிக்கொண்டிருக்கிறார் என்ற வார்த்தைகள் அடிக்கடி இணையத்தில் ஊடுருவி வருகிறது.
இந்தக் காதல் தொடர்பை சமந்தா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவும் இல்லை, மறுத்தும் இல்லை. ஆனாலும் ராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு, இவர் காதல் உண்மைதான் என்பது போல சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதை விட ஹாட் ட்விஸ்ட் என்னவென்றால் சமந்தா தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து, ராஜுடன் சேர்ந்து ஜாலியாக டூரில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அமெரிக்கா தெருக்களில் ராஜுடன் சுற்றிப்பார்த்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரிகளில் பகிர்ந்துள்ளார். ஆனால் இங்கே தான் சிக்கல், ராஜ் நிதிமோரு ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் இன்னும் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து செய்யவில்லை என்கிற செய்திகள் கூட வலம் வருகிறது. அதனால் சமந்தாவின் இரண்டாவது திருமணம் இப்போது தள்ளிப்போயிருக்கிறது என்று வட்டாரங்களில் கிசுகிசு. ராஜ் மனைவி விவாகரத்து கொடுத்த உடனே, இவர்களுடைய திருமணம் நடைபெறும் என கோலிவுட், பாலிவுட் ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். அடுத்த அப்டேட் வரைக்கும் ரசிகர்கள் சமந்தா இன்ஸ்டாவையே நோட்டம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.





