சஞ்சு சாம்சனை மையமாக வைத்து சுப்மன் கில் வெளியிட்ட வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுப்மன் கில் பகிர்ந்த புகைப்படத்தில், தொடரின் நாயகனாக தேர்வான சஞ்சு சாம்சன் இடம்பெறாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதே நேரத்தில், அதே கொண்டாட்ட புகைப்படத்தை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்த நிலையில், அதில் சஞ்சு சாம்சன் தெளிவாக காணப்பட்டார். இதனால் சுப்மன் கில் பகிர்ந்த புகைப்படத்தில் சஞ்சுவின் பகுதி எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்துள்ளது. குறிப்பாக பும்ராவுக்கு பின்னால் ஒரு காலின் பகுதி மட்டும் தெரிந்ததால் இந்த விவாதம் மேலும் சூடு பிடித்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் 97, 89, 89 என தொடர்ந்து மூன்று முக்கிய இன்னிங்ஸ்களை விளாசி இந்திய அணியின் வெற்றியில் மிகப் பெரிய பங்கு வகித்தார் இதன் பலனாக அவர் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். நீண்ட காலமாக இந்திய அணியில் நிலையான இடத்திற்காக போராடி வந்த சஞ்சுவுக்கு இது மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் சுப்மன் கில் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். தொடக்க வீரர் இடத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டிருப்பதும், கில்லின் சமீபத்திய ஃபார்ம் சரிவும் இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இது சாதாரண தவறா, இல்லையா திட்டமிட்ட நடவடிக்கையா? சுப்மன் கில்லிருக்கு இவ்வளவு வன்மமா என்ற கேள்வியே தற்போது அதிகமாக பேசப்படுகிறது.




