இது கோலிவுட்டா அல்லது கொக்கைன்வுட்டா?? போதை பொருள் வழக்கில் சிக்குவாரா கமல்ஹாசன்!!

தமிழ் சினிமா உலகில் தற்போதைய சூழலில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் பல பிரபலங்கள் சிக்கக் கூடும் என்ற அச்சம் திரையுலகை உலுக்கி வருகிறது. இந்த சூழலில் பாடகி சுசித்ரா அளித்த ஒரு நேர்காணல், தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நேர்காணலில், முன்னணி நடிகர் கமல் ஹாசன் நடத்திய பார்ட்டிகளில் வெள்ளித் தட்டில் கொக்கைன் பரிமாறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், அந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்காக சில பிரபலங்களுக்கும் கொக்கைன் வழங்கப்பட்டு, பின்னர் அவர்கள் பெட்ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சுசித்ரா புகார் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி தகவலை இந்துமுன்னணி கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவரது பதிவில், கொக்கைன் கொடுத்து பெட்ரூமுக்கு கூட்டி போய்விடுவார்கள் என சுசித்ரா கூறியதை வைத்து, “கொக்கைன்வுட் மாஃபியாவை எதிர்த்து போராடும் சுசித்ரா மற்றும் சின்மயிக்கு விருது வழங்க வேண்டும்” என்றும் அவர் எழுதியுள்ளார். இந்த சர்ச்சையில் மாதவன், மணிரத்னம், உதயநிதி, தனுஷ், விஜய், ஏ.ஆர். ரஹ்மான், விஷால், திரிஷா, நயந்தாரா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பெயர்களும் வெளியே வந்துள்ளன.

இதனால் கோலிவுட் தற்போது “கொக்கைன்வுட்” என்ற பட்டம் வாங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. இதேவேளை, சுசித்ரா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது சம்பவங்களை அடுத்து விளக்கம் பெற வேண்டிய நிலையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பெயர் குறிப்பிடப்பட்ட பிரபலங்கள் இதற்கு என்ன பதில் தருகிறார்கள், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் இன்னும் பல பரபரப்புகளை உருவாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது வந்துள்ள இந்த கொக்கைன் சர்ச்சை உண்மையில் எவ்வாறு முடியும் என்பதைக் காண மக்கள் காத்திருக்கின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram