இது காதலா கொலைவெறியா?? 6 வருட காதல் எலும்பு கூடாக மாறிய கொடூரம்!!

ஒரு சாதாரண காதல் தொடக்கம், குடும்ப எதிர்ப்பு, பின்னர் ஒரு கொடூரமான கொலை இவை எல்லாம் சேர்ந்து இன்று கர்நாடகாவின் கதக் மாவட்டத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 25 வயதான மது ஶ்ரீ, மற்றும் 27 வயதான சதீஷ் இவர்களின் ஆறு வருடக் காதல், எதிர்பாராத வகையில் கொடூரமான முடிவை எட்டியுள்ளது. மது ஶ்ரீ, ஒரு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். அவரும் பெட்ரோல் பங்க் ஊழியரான சதீஷும் பள்ளி நாட்களில் தங்களது உறவை ஆரம்பித்தனர்.

குடும்பத்தினரால் இந்த உறவு ஒப்புக்கொள்ளப்படவில்லை. மது ஶ்ரீ யின் பெற்றோர், அவரது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கத்தில், உறவினர் வீட்டிற்கு அனுப்பியிருந்தனர். 2024 டிசம்பர் 16: மது ஶ்ரீ உறவினர் வீட்டில் இருந்து காணாமல் போனார். ஆரம்பத்தில் “மாயம்” எனக் கருதப்பட்ட நிலையில், பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்கமான வழியில் விசாரணை நடைபெற்று வந்தாலும், குறிப்பிட்ட எந்த தடையமும் கிடைக்கவில்லை. 2025 ஜூன் மாதம்: சதீஷ், கடந்த ஆண்டு டிசம்பரில் மது ஶ்ரீ மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வதைக் காட்டும் கண்காணிப்பு காட்சி வெளியாகிறது. இது விசாரணையில் முக்கிய மாறுதலாக அமைகிறது. போலீசாரின் கடுமையான விசாரணையில், சதீஷ் உண்மையை ஒப்புக்கொள்கிறார்.

சம்பவ நாள்: 2025 ஜனவரி 12. சதீஷின் சொந்த தோட்டத்தில் தங்கிய மது ஶ்ரீ, திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதற்காக, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அதன்பின் உடலை ஒரு குழியில் புதைத்தார். 3 மாதங்களுக்கு பின், எலும்புகள் மட்டும் மீதமுள்ள நிலையில், அவற்றை தோண்டி எடுத்து வேறு இடங்களில் மறைத்தார்.

சதீஷ் காட்டிய இடங்களின் அடிப்படையில், பல பகுதிகளில் தேடுதல் நடத்திய போலீசார், மது ஶ்ரீ யின் எலும்புக்கூடுகளை மீட்டனர். தற்போது அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான திறந்த உரையாடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. “காதல் செய்வது குற்றமல்ல, ஆனால் புரிதலின்றி அதனைத் தடுக்க முயற்சிப்பது சில சமயங்களில் மிக மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது”

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram