நடான்ஸ் அணு உலையை தாக்கியது இஸ்ரேல்!! கதிர்வீச்சு பரவல்!! உலக நாடுகள் அதிர்ச்சி!! 

Israel attacked Natanz nuclear reactor!!
டெஹ்ரான்: ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் ஈரானின் அணு உலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அணுக்கதிர் வீச்சுகள் மளமளவென கசிய தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளது. இந்த தாக்குதலில் அணுக்கதிர் வீச்சு பரவி மக்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. ஈரான் நாட்டின் நடான்ஸ் இருந்த அணுக்கதிர் உலையின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA ) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் அணு கதிர் வீச்சின் அளவு கட்டுக்குள் இருப்பதாகவும், இதனால்  மக்களோ அல்லது சுற்றுச்சூழலோ பாதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும்  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலானது அணு உலையை தாக்கும் நோக்கத்திலேயே தாக்கப்பட்டது. யுரேனியம் 235 ஐ 60% வரை செறிவூட்டிய நிலையில் அணு உலையின் மேற்பரப்பு பகுதியை அழித்துவிட்டது.
அணு உலையின் முக்கிய மற்றும் அவசர கால அமைப்புகள், மின்சார உள்கட்டமைப்புகளை அழித்து விட்டதாக கூறியுள்ளார். நிலத்தடியில் உள்ள கேஸ்கேட் மண்டபம் எந்தவித சேதமும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நடான்ஸ் அணு உலை தாக்கப்பட்டது இல்லாமல் ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை, இஸ்பாஹான் வளாகம் உள்ளிட்ட மற்ற இடங்களிலும் தாக்குதல் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில்  யுரேனியம் மாற்றும்  வசதி, எரிபொருள் உற்பத்தி ஆலை, யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பவுடர் ஆலை மற்றும் எரிபொருள் தகடு தயாரிக்கும் ஆலை ஆகியவையும் அடங்கும். எந்தவித காரணத்திற்காகவும் அணுசக்தி நிலங்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது. இது மக்களை மற்றும் சுற்றுசூழலையும் பாதிக்கும் என க்ரோஸி. 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது. மேலும், தேவைப்பட்டால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரஃபேல் கூறியுள்ளார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram