ஜெருசலேம்: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 257 இஸ்ரேலிய மக்களை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா முனையின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாசின் கிளர்ச்சியாளர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருந்தது. பின் பணைய கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகும் போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதுவரை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். தற்போது தரைவழி தாக்குதலை காசாவின் மீது நடத்தி வருகிறது. நேற்று காசாவின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
காசாவில் ஏற்கனவே இஸ்ரேல் அம்மாஸ் போரின் போது தொகுதி தொகுதியாக பல இடங்கள் அழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மீண்டும் தரை வழி தாக்குதலை தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது உடைமைகளை காசாவை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் காசாவில் உள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் சமூக முடிவை எட்ட முடியாத நிலையில் உள்ளது தாக்குதல். இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தால் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று சமூக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ” காசா எரிந்து கொண்டிருக்கிறது இரவு முழுவதும் நகரை குண்டு வீச்சுகளால் தாக்கிக் கொண்டிருக்கிறது” என ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.


