மீண்டும் இஸ்ரேல்- ஈரான் மோதல்!! உலக அளவில் ஏற்படுத்தும் தாக்கம்!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான அரசியல் சூழ்நிலையால், மத்திய கிழக்கு பகுதி கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேலின் விமானப்படை, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ அமைப்புகளை குறிவைத்து “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் வான்வழித் தாக்குதல் ஒன்றை நடத்தியது. இந்த தாக்குதலின்போது, டெஹரானில் அமைந்துள்ள பல்வேறு எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்து பெரும் அளவில் பரவி, பல லட்சம் லிட்டர் எண்ணெய்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஈரான் தனது பாதுகாப்பு நடவடிக்கையாக “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலின் சில ராணுவ முகாம்கள் மற்றும் விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களின் பின்னணியில், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். டெஹரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வான்வழி தாக்குதலால் சீர்குலைந்துள்ள நோயியல் மையங்கள், பள்ளிகள் மற்றும் பொது கட்டிடங்களும் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன.

இந்தச் சம்பவங்கள், சர்வதேச வர்த்தக சந்தையில் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இச்சம்பவங்களை கண்டித்து, இரு தரப்பையும் அமைதிக்குத் திரும்ப வேண்டியதாய் வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த மோதல், எதிர்காலத்தில் மத்திய கிழக்கு பகுதி மட்டுமன்றி உலக அளவிலும் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram