வாஷிங்டன்: ஒவ்வொரு உயிருக்கும் இதயத்துடிப்பு இருப்பது போல் எல்லா உயிர்களையும் வாழ வைக்கும் பூமிக்கு துடிப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன்பு விடையை கண்டுபிடித்து விட்டனர். 1960 களிலேயே பூமி உயிருடன் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் சிலர் கடலில் உருவாகும் அலைகளின் காரணமாக இந்த சத்தம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தனர்.
உலகம் முழுவதும் ஒரே மாதிரியான கடல் அலை இருக்க வேண்டும் அல்லவா, ஆனால் மெரினாவில் ஒரு பகுதியிலிருந்து வரும் அலைக்கும், இன்னொரு பகுதியிலிருந்து வரும் அலைக்கும் 26 வினாடி சப்தத்தை உருவாக்கும் வித்தியாசம் உள்ளது. 1960 பின் தொடர்ந்த ஆராய்ச்சியில் 2005இல் கொலராடோ போல்டர் ஆராய்ச்சியாளர்கள் நவீன கருவிகளை கொண்டு மற்றும் நில அதிர்வை கொண்டும் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
உயிருடன் உள்ள உயிரினங்களில் இருந்து தான் துடிப்பு வெளிவரும் மற்றபடி பூமிக்கு உயிர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எரிமலைகள் வெடிப்பினால் இந்த சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவில் கூறினார்கள். ஆனால், இந்தியாவில் எரிமலைகள் கிடையாது பின் எவ்வாறு 26 வினாடிக்கு ஒரு முறை துடிப்பை உணர முடிகிறது என்று எழுப்பிய கேள்விக்கு சீனா பதில் அளிக்கவில்லை.
அவ்வாறு பூமிக்கு உயிர் இருந்தால் காலுக்கு அடியில் பூமி உயிருடன் துடித்துக் கொண்டிருக்கிறது மற்றும் நம்மால் வேகமாக நடக்க முடியுமா, குதிக்க முடியுமா, மண்வெட்டியை வைத்து வெட்ட முடியுமா? இதெல்லாம் ஏதோ ஒரு புதிராக உள்ளது. பூமிக்கு உயிர் உள்ளதை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆராய்ச்சிகள் தொடருமோ தெரியவில்லை. ஒருபுறம் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.





