ஜூன் மாதம் தொடங்கியது முதல் நடந்த கோர விபத்துக்கள்!! தாங்க முடியலப்பா சாமி!!

ஜூன் மாதத்தில் தொடர்ச்சியாக நடந்த மூன்று கோர விபத்துகள்ஜூன் மாதம் என்றாலே விபத்துக்கள் ஏற்படும் மாதம் என்று அழைக்கப்படும் அளவிற்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜுன் 2 (2023) அன்று ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகில் 3 ரயில்கள் மோதியதில் இந்தியா பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.

கொரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஹவ்ரா எக்ஸ்பிரஸ், மற்றும் ஒரு பிரைட் ரயில் மோதியதில் 296 பேர் உயிரிழந்தனர். மற்றும் 1200 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜூன் 2 ஆம் தேதி (2024) பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இதில் விகாஸ் குமார் மற்றும் ஹிமான்ஷு குமார் ஆகியோர் தலையிலும் முதுகிலும் காயமடைந்தனர். அவர்கள் பட்டியாலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்தால் 26 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது, மற்றும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.ஜூன் 12 (2025) அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக்குக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI 171) மதியம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 242 பேரும் உயிரிழந்தனர்.இதில் இந்தியா 169, பிரிட்டன் 53, கனடா 1, போர்ச்சுகீசியர் 7 மொத்தம் 242 பேர். இவர்களில் பலர் மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு துறையினரும், உயிரிழந்துள்ளனர்.

இந்த மூன்று சம்பவங்களும் மக்களிடையே பெரும் பயத்தையும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு குறைபாடுகள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக உள்ளனவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றன. தொடர்ந்து ஜூன் மாதத்தில் நடந்த இந்த கோர விபத்துக்கள் ஜூன் மாதம் என்றாலே ஒரு சோதனை மாதம் என்ற பேச்சு மக்களிடையே இருக்கிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram