தற்பொழுது உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா இரண்டாம் இடத்திற்கு சென்று இருக்கிறது காரணம் கொரோனாவால் அங்கு பல லட்சக் கணக்கில் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் மக்கள் தொகையை உயர்த்துவதற்காக சீன அரசு புதிய புதிய விதிகளை விதித்து வருகிறது.
அதன்படி தற்போது ஐடி நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்றால் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டும் என்ற புதிய விதி ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக சீனாவின் ஷாங்டான் மாகாணத்தில் இருக்கக்கூடிய Shandong Shuntian Chemical Group என்ற நிறுவனமானது தன்னிடத்தில் வேலை பார்க்கக் கூடிய 1200 ஊழியர்களுக்கும் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அந்த விதியின் படி, 28 வயது முதல் 54 வயது வரை இருக்கக்கூடிய திருமணம் ஆகாதவர்கள் மற்றும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என அனைவரும் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டாயமாக திருமணம் செய்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களை பணியை விட்டு நீக்கி விடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஊழியர்களுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
மார்ச் மாதத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் முதலில் கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தெரிவித்ததோடு ஜூன் மாதம் வரை திருமணம் செய்யவில்லை என்றால் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் செப்டம்பர் மாதம் வரை கால தாமதம் செய்தால் அதன் பின்பு வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது