சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 82 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் அவருக்கு காத்திருந்து ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர். இசையமைப்பாளராக இதுவரை 8,500 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். மேலும், 500 க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் தனது ரசிகர்களை ஈர்த்துள்ளார். பெயரில் மட்டும் இளமை அல்லாது வாழ்விலும் துள்ளலோடு இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இளையராஜா என்றால் சோகம், காதல், கோபம் எல்லாவற்றிற்கும் இவரது பாடல்கள் தான் என்பது போல் இசையமைத்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்து இளையராஜாவுடன் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர் ரசிகர்கள்.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் எழுதி முடித்த சிம்பொனி ஒன்றை அரங்கேற்றினார். தன்னுடைய 82 வது பிறந்தநாளை சென்னை, கோடம்பாக்கம் தனது ஸ்டூடியோவில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை வாழ்த்திய ரசிக பெருமக்களுக்கும், நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி என்று உருக்கமாக கூறினார்.
தனக்கு வாழ்த்துக்களை கூறுவதற்காக நீண்ட தூரம் கடந்து, தூர தேசத்திலிருந்து வந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் ரசிக பெருமக்களுக்கு நன்றி என்றும், ரசிகர்களை பார்க்கும் பொழுது வாயடைத்துப் போகுது என்றும், என் மீது வைத்திருக்கும் கருணைக்கு எப்படி வாழ்த்து சொல்வது என்று தெரியவில்லை என்றும் ஆனந்தத்துடன் பேசி இருந்தார்.
உங்களிடம் பேசிய வீடியோ காலங்களில் பரவி வைரலாகி வருகிறது. சினிமாவுக்கு வந்து 50 வது ஆண்டு காலத்துறை பயணத்தை முன்னிட்டு அரசு தரப்பில் விழா ஒன்றை கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.