கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் ஜடேஜா போட்டியை முடித்து வைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை கடைசி நான்கு ரன்களுக்கு பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார் ஜடேஜா மற்றும் இவர் இந்த போட்டி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் முதலில் டாஸ் என்று பேட்டிங் தேர்வு செய்து களம் இறங்கியது.
முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களம் இறங்கியது தொடக்கத்தில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு உயர்த்தினார் அடுத்தடுத்து வந்து வீரர்கள் முடிந்த பங்கினை இந்திய அணிக்கு ஆற்றி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்த பின் ஜடேஜா களத்திற்கு வந்து கடைசி இரண்டு ரன்கள் தேவை என்ற போது பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார் ரவீந்திர ஜடேஜா.
இந்த வெற்றிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய ரவீந்திர ஜடேஜா, பேட்டிங்கை பொறுத்த வரை நான் களமிறங்கும் வரிசை என்பது என்னை ஹீரோவாக மாற்றும் அல்லது வில்லனாக மாற்றும், ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் இணை கடைசி நேரத்தில் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றியது. நான் நிச்சயம் அடித்துக் கூறுவேன் இந்த இணை தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர்களில் விளையாடாமல் இருந்திருந்தால் நான் வருத்தப்பட்டு இருப்பேன். ஆனால் இந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் நான் நல்ல உடல் தகுதியுடன் இருந்து கோப்பையை வென்று இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.





