சென்சார் சிக்கல் முடிந்தது!! ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

jananayagan-movie-censor-issue-resolved-high-court-orders-ua-certificate

வெற்றி வாகை சூடிய ஜனநாயகன் கோர்ட் கொடுத்த கிரீன் சிக்னல்  இனி பொங்கல் தளபதி திருவிழா தான்

சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: சென்சார் போர்டு இழுத்தடித்து வந்த நிலையில், படக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி:

படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சில குறிப்பிட்ட காட்சிகளுக்குச் சென்சார் போர்டு பரிந்துரைத்த கத்தரிக்களை (Cuts) நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, படத்தைத் திரையிடத் தடையில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று மாலைக்குள் முறைப்படி சான்றிதழைப் படக்குழுவிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ் கன்பார்ம்: இந்தத் தீர்ப்பின் மூலம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கல் ரிலீஸாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவது 100% உறுதியாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், இப்போதே தியேட்டர்களில் கட்-அவுட் கட்டவும், கொண்டாட்டங்களைத் தொடங்கவும் தயாராகிவிட்டனர்.

ரவி மோகன் & ஜெய் சொன்னது பலித்தது: இன்று காலை தான் ஜெயம் ரவியும், ஜெயும் “படம் வரும் நாளே பொங்கல்” என உருக்கமாகப் பதிவிட்டிருந்தனர். அவர்களின் நம்பிக்கையைப் போலவே சட்டப் போராட்டத்திலும் ‘ஜனநாயகன்’ வென்றுள்ளது. படக்குழுவினர் தற்போது ரிலீஸ் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram