டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ தலைநகர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் டோக்கியோவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தகாஹிரோ ஷிரைசி . கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒன்பது பேரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.ஒன்பது பேரில் 8 இளம்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
8 பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பின் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜப்பான் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை எடுத்து போலீஸா தகாஹிரோவை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்து பின் கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த பலாத்கார கொலை வழக்கானது 2020 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
60 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட குற்றத்திற்கு தவறான தண்டனை அனுபவித்த இவாவோ ஹகமடா என்பவருக்கு விசாரணை முடிந்த பின் மரண தண்டனை விடுவிக்கப்பட்டது. மரண தண்டனை ரத்து செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக தகாஹிரோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்கள் இருந்தது.
இந்நிலையில் நேற்று டோக்கியோ தடுப்பு காவல் நிலையத்தில் ரகசியமாக தகாஹிரோவை தூக்கிலிட்ட உள்ளனர். ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆட்சி பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.