ஜப்பான்: வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2G இணைய சேவையில் தொடங்கி தற்போது 5G வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை தற்போது ஜப்பான் பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1.02 பெட்டா பிட்ஸ் என்பது ஒரு மில்லியன் ஜிகாபிட்ஸ் ஒரு வினாடிக்கு என குறிப்பிடப்படுகிறது. இணைய வேகம் மூலம் நெட்பிலிக்ஸ் வலைதளத்திலிருந்து படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்து விட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. தற்போதைய ஆய்வக சோதனை மற்றும் எதிர்கால தரவு தேவைகளை பூர்த்தி செய்யும் தேவைகள் ஆகியவை முக்கிய படிக்கல்லாக பார்க்கப்படுகிறது. 1.02 பெட்டா பிட்ஸ் இணைய வேகம் தற்போது பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் பல ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.
இணைய வேக சேவையை அடைய 1,800 கிலோமீட்டர் அதற்கும் மேலாக 19 கோர் ஆப்டிகல் பைபர் கேபிள்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக லண்டனில் இருந்து ரோம் வரையிலான தூரம் வரை இருக்கும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் முக்கிய நோக்கமானது நெட்ப்ளிக்ஸ் வீடியோக்கள் மற்றும் படங்களை ஒரே வினாடியில் பதிவிறக்கம் செய்து விடலாம் என கூறுகின்றனர். மேலும் 150GB உள்ள வீடியோ கேம்களை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பதிவிறக்கம் செய்து விட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 1.02 பெட்டா பிட்ஸ் இணைய வேகம் தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.