தமிழ் சினிமா துறையில் ஜெயம் ரவி அவர்கள் ஜெயம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய முதல் படம் இது என்று யாராலும் குறிப்பிட முடியாது காரணம் அவர் அவருடைய சிறு வயதிலேயே தன் தந்தையினுடைய தயாரிப்பில் 1980 இல் வெளியான தொட்டில் சபதம் திரைப்படத்தில் ராம்கியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நண்பர்களோடு விளையாடுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது ஜெயம் ரவி அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்காக வழக்குகளை சந்தித்து வருகிறார் இதனால் அவருடைய பெயர் சற்றும் மோசமானது எனினும் என்னுடைய விடாமுயற்சியால் பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் பராசக்தி திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க முற்பட்டு இருக்கிறார். கதாநாயகனாகவும் காதல் நாயகனாகவும் பார்த்து ரசித்த ஜெயம் ரவி அவர்களை தற்பொழுது வில்லனாகவும் காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயம் ரவி குறித்து அவருடைய தந்தை தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் அதிர்ச்சி அடையக் கூடியதாகவும் மாற்றி இருக்கிறது. அதாவது, ராம்கியின் உடைய சிறு வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்து ஒரு சிறுவனை வரவழைத்ததாகவும் அதில் ஜெயம் ரவியை நடிக்க வைத்தால் தன் முன் வசனம் சரியாக பேசமாட்டான் என நினைத்து வேறொரு பையனை வரவழைத்ததாகவும் அவரோடு மற்ற சிறுவர்கள் விளையாடுவது போன்ற காட்சிக்கு ஜெயம் ரவியை அழைத்து வந்ததாகவும் ஜெயம் ரவியின் தந்தை தெரிவித்திருக்கிறார்.
அப்பொழுது தான் இருந்தால் சிறு வசனத்தை கூட தன் மகன் பேசமாட்டான் என நகர்ந்து சென்றதும், ஜெயம் ரவி அவர்கள் நான்கு வரி வசனத்தை ஒரே டேக்கில் முடித்துவிட்டார் என்பதை மற்றவர் சொல்ல கேட்டு கண்ணாடி முன் என்று தன்னை தானே கன்னத்தில் அறைந்து கொண்டதாகவும் புலம்பி இருக்கிறார் ஜெயம் ரவியின் தந்தை.