INDIAN OIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ரூ.1,40,000 வரை மாத சம்பளம்!!

Job opportunity at INDIAN OIL

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய 97 தர கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Assistant Quality Control Officers (Grade Ao) பணிக்காக உள்ள 97 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 5 வகையான பணியாளர்கள் தேவை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு :-

✓ UR-45
✓ LSC-13
✓ ST-6
✓ OBC-24
✓ EWS-9

இந்த பணிகளுக்கான கல்வி தகுதி Chemistry, Biochemistry, Pharmacy, Pharmacology, Food Technology, Geochemistry போன்ற ஏதேனும் ஒரு பிரிவு 60% மதிப்பெண் மற்றும் 2 ஆண்டுகள் முன்ன அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான மாத சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :-

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கக்கூடிய கடைசி தேதி மார்ச் 21 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உடனடியாக www.iocl.com என்ற அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான பதிவு கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram