தமிழகத்தில் தற்சமயம் குழந்தைகள் நலத்துறையில் ஏறத்தாழ 14 மாவட்டங்களில் அரசு வேலை வாய்ப்பு கோரியுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் கீழ் செயல்படும் இளைஞர் குழுக்கு உறுப்பினர் சேர்க்கைக்காக இது வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக இந்த இளைஞர் குழு நியமிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பெரும்பாலும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசு வேலை கிடையாது. சமூக நீதிப் பணி ஆகும்.
இதன் வயது வரம்பு சமூகப் பணியாளர் பதவிக்காக 35 முதல் 65 வரை இருக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அடிப்படை தகுதியாக விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் அல்லது அவர்கள் சார்ந்த பணியில் குறைந்தது ஏழு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உளவியல், மனநல மருத்துவம் அல்லது சமூகவியல் சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருத்தல் வேண்டும்.
https://dsdcpimms.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ குழந்தைகள் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெறலாம். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ்,
சென்னை – 600 010.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு மேற்கூறிய முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை செலுத்த கடைசி தேதி மார்ச் 7, 2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவாரூர், தஞ்சாவூர், தேனி,வேலூர் விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அரசு கோரியுள்ளது