சுகாதார துறை ஆய்வாளராக பணிபுரிய வேலை வாய்ப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும். சென்னையில் உள்ள நீர் பகுப்பு ஆய்வகம், 38 மாவட்டங்களில் சுகாதார ஆய்வாளர், ஆய்வக நிபுணர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியவற்றிற்கு வேலைவாய்ப்பு நல்கியுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 126 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இது நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளது. மேலும் வேதியல் டிகிரி படித்தவர்களுக்கும், ஆய்வகப் பணி முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக தனியே 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு வயது தகுதி 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம் மாதம் 21,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பனிரெண்டாம் வகுப்புகளில் உயிரியல் பாடம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அத்துடன் அவர்கள் ஆய்வக பணி படித்திருக்க வேண்டும் என்றும் விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 11 இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சம்பளம் ரூ. 8500. இதற்கு தேவையான ஆவணங்களை மற்றும் விண்ணப்பத்தை இணைத்து மண்டல நீர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. பெரும்பாலும் இந்த நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரரின் தகுதிக்கேற்றவாறு சம்பளம் முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுப் பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்கள் அரசு வேலைக்கு ட்ரை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.